2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் ஆசிரியர்களுக்கு 7 ஆம் திகதி சம்பளம்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

நோன்பு பெருநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி முன்கூட்டி சம்பளம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் 20 ஆம் திகதி வழங்கப்படுவது வழக்கமாகும். இருப்பினும் இம்முறை முஸ்லிம்களினால் அனுஷ்டிக்கப்படுகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு விசேடமாக 7 ஆம் திகதி இச்சம்பளம் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர இம்மாத சம்பளத்தினைத் தொடர்ந்து அதிபர், ஆசிரியர்களுக்கான நோன்புப்பெருநாள் முற்பண கடன் தொகையாக தலா 5000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடமையாற்றும் சகல முஸ்லிம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இவ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்கனவே ரூபா 5000 வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .