2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘உள நலம் காப்போம் உள ஆரோக்கியம் பேணுவோம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

 

‘உள நலம் காப்போம்  உள ஆரோக்கியம் பேணுவோம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் ​இன்று (10) விழிப்புணர்வு  ஊர்வலமொன்று  இடம்பெற்றது.

தொழில்சார் உள நல உதவி நிலையத்தால் உலக உள சுகாதார தினத்தை முன்னிட்டு, இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மட்டக்களப்பு அரசடி சந்தியிலிருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகம் வரை சென்ற இந்த ஊர்வலத்தின் போது,  உள நலத்தின் முக்கியத்துவம், உள ஆரோக்கியம் பேணுதல் போன்றவைகள் வலியுறுத்தப்பட்டன.

அருட்தந்தை பேல் சற்குண நாயகம் உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் இதில் பங்குகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .