2024 மே 08, புதன்கிழமை

மட்டக்களப்பில் 389,580 பேர் வாக்களிக்கத் தகுதி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுராட்சி மன்ற தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 389,580 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்காக 63,031 வாக்காளர்களும், காத்தான்குடி நகர சபைக்காக 29,666 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோன்று ஏறாவூர் நகர சபைக்காக 18,606 வாக்காளர்களும், ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக 55,723 வாக்காளர்களும், கோறளைப்பற்று பிரதேச சபைக்காக 48,749 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்காக 16,831 வாக்காளர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 20,289 வாக்காளர்களும் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், மண்முனைப் பற்று பரதேச சபைக்காக 23,311 வாக்காளர்களும், மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்காக 18,367 வாக்காளர்களும், மண்முனை தெண் எருவில் பற்று பிரதேச சபைக்காக 44,397 வாக்காளர்களும், மண்முனை மேற்கு பிரதேச சபைக்காக 20,715 வாக்காளர்களும், போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக 29,595 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X