2024 மே 08, புதன்கிழமை

மௌலவியைப் பிணையில் எடுத்தார் பௌத்த தேரர்

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மௌலவியொருவரைப் பொலிஸ் பிணையில் விடுவிக்க, தேரர் ஒருவர் பிணை நின்ற சம்பவம், காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா கிராமத்தில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவமொன்று தொடர்பில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவியொருவர், காத்தான்குடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்துக்கு வேறோர் அலுவலுக்காக வருகை தந்த கல்முனை விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ண தேரர், குறித்த மௌலவியைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யுமாறு, காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வேண்டுகோளையடுத்து, தேரர் பிணை நிற்க, மௌலவி, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மௌலவியின் வழக்கை, நீதிமன்றத்துக்குப் பதிலாக, மத்தியஸ்த சபைக்குக் கொண்டு செல்லுமாறும், தேரர் விடுத்த வேண்டுகோளின் பேரில், அவ்வழக்கு, மத்திய சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X