2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பழுதடைந்த மீன்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தையில் பழுதடைந்த நிலையில் 96 கிலோகிராம்   மீன்களை களுவாஞ்சிக்குடி  சுகாதார பரிசோதகர்கள்  புதன்கிழமை (23) கைப்பற்றினர்.

மேற்பார்வை சுகாதார பரிசோதகர் கா.ஜெயசங்கர் தலைமையில்   களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் சி.யோகேஸ்வரன் கோட்டைக்கல்லாற்றுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் கு.குபேரன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டன. 

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையில் விற்கப்பட்ட மீன்களை  வாங்கி உட்கொண்ட 03 பேர் வாந்திபேதி, வயிற்றோட்டம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,  பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து  சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பழுதடைந்த மீன்களை கைப்பற்றியதாக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் கா.ஜெயசங்கர் தெரிவித்தார்.

பழுதடைந்த மீன்களில் கும்பிளாப்பாரை, வளயா உள்ளிட்டவைகள்  அடங்குவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .