2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் நச்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தி

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சகல மாகாணங்களிலும் நச்சுத் தன்மையற்ற உணவு வகைகளை உற்பத்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியதற்கு அமைவாக, சப்ரகமுவ மாகாணத்தில், நச்சுத் தன்மையற்ற உணவு வகைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.    

இது தொடர்பில் மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று, மாகாண சபைக் கட்டடத்தில், புதன்கிழமை (13) நடைபெற்றது. சப்ரகமுவ மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உணவு உற்பத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, நச்சுத் தன்மையற்ற  உணவு வகைகளை உற்பத்தி செயவதற்கான திட்டங்களை வகுத்தல், இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகளின் பாவனையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல், இயற்கை பசளையை  பயன்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வை விவசாயிகளுக்கு இடையில் ஏற்படுத்தல், விற்பனையின் போது உணவு வகைகள் பழுதடையாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .