2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தலை இலக்கு வைத்து மதுபானம், சிகரெட்டுக்கு எதிராகக் கிளர்ச்சி

எஸ்.சதிஸ்   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் காலத்தை மய்யமாகக் கொண்டு, மதுபானம், சிகரெட் பாவனைக்கு எதிரான கிளர்ச்சியொன்றை, நுவரெலியா மாவட்ட இளைஞர் கழகம் ஆரம்பித்துள்ளது.

தேர்தல் காலத்தில் பிரசாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், மதுபானம், சிகரெட் என்பவற்றை வாக்காளர்களுக்கு விநியோகித்து, வாக்குகளைக் கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள அக்கழகம், சிகரெட், மதுபாவனைக்கு எதிரான வேட்பாளர்களுக்கே, தாம் ஆதரவு வழங்கப்போவதாகவும் இது குறித்து நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ள ஒவ்வொரு வேட்பாளரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்படி கழகத்தின் ஏற்பாட்டில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, ஹட்டன் நகரில், நேற்று (11) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி அமைப்பினர் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்கள்,

தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தயாராக உள்ள வேட்பாளர்களுக்கே தாம் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்ததுடன்,  நூறு மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு அருகில் தனி சிகரெட் வகைகளை விற்பனை செய்ய கூடாது, மதுபானம், போதைபொருள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்ப
கூடியவர்களாக தாம் ஆதரிக்கும் வேட்பாளர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறான வேட்பாளர்களுக்கே தாம் வாக்களிக்க போவதாகவும் தெரிவித்தனர்.  
போதை பொருள் பாவனையில், நுவரெலியா மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்றுச் சுட்டிக்காட்டிய அவ்வமைப்பினர், அதேபோன்றே போஷாக்குக் குறைப்பாட்டிலும் நுவரெலியா மாவட்ட முதலாமிடத்தில் காணப்படுவதாகத் தெரிவித்தனர். 

எனவே நல்ல சமுதாயத்தைக்  கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், சிறந்த அரசியல் தலைமத்துவத்தினூடாகவே மாற்றம் ஒன்றை காண  முடியும் என்றும்  எனவேதான் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பாக, இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று தாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .