2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தரம் 5 மாணவன் கடத்தல்

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவன், மேலதிக வகுப்புக்கச்  சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டச் சம்பவம் ஹட்டனில் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விக் கற்றுவரும் நானுஓயாவைச் சேர்ந்த சிறுவன், மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு ஹட்டன் டன்பார் வீதியிலுள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் அச்சிறுவனை பலவந்தமாக தூக்கி முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளதுடன் அச்சிறுவனின் வாய், கண்கள் மற்றும் கைகளை துணியொன்றினால் கட்டியுள்ளனர்.

பின்னர், தலவாக்கலை  நகருக்கு முன்பாக காணப்படும் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.  

பதற்றமடைந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்தை வந்தடைந்தச் சிறுவன், தான் நானுஓயாவுக்குச் செல்ல வேண்டுமென புகையிரத நிலைய அதிகாரியிடம் கூறியுள்ளான்.

சிறுவனின் பதற்ற நிலையை உணர்ந்த புகையிரத நிலைய அதிகாரி, சிறுவனது இருப்பிடத்தை அறிந்து நானுஓயா புகையிரத நிலையத்துக்கு அறிவித்ததையடுத்து சிறுவனின் பெற்றோர் நேற்றிரவு தலவாக்கலை புகையிரத நிலையத்துக்கு வந்து சிறுவனை மீட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பின்னர் சிறுவன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை  வீடு திரும்பியுள்ளார்.

மேற்படி சிறுவன் நானுஓயா உடரதெல்;ல பிரதேசத்தைச் சேர்ந்தவனெனவும் ஹட்டன் பிரதேசத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து கல்வி கற்று வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .