2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திகாவின் பணிகளில் பேதமில்லை

Niroshini   / 2016 ஜூலை 17 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

மலையகத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களையும் இனங்கண்டு, அங்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருவதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மேலும், 'அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துவரும் அபிவிருத்திப் பணிகளின்போது, எந்தவிதமான தொழிற்சங்க, அரசியல் பேதங்களும் பார்க்கப்படுவதில்லை. அமைச்சர் திகாம்பரம், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் நோக்குடன் செயற்படுகின்றார்' எனவும் ஸ்ரீதரன் கூறினார்.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நோட்டன் - டங்கல் தோட்டத்தில், பாதையொன்றைச் செப்பனிடுவதற்கான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த காலங்களில், மலையகப் பிரதேசங்களில் உள்ள குறிப்பிட்ட தோட்டங்களில் மாத்திரம் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், மிகவும் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள தோட்டங்களில்? அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

நோட்டன் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய தோட்டங்களில், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாத காரணத்தினால், இந்தத் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனைக் கவனத்திற்கொண்ட அமைச்சர் திகாம்பரம் சவுத்வனராஜா, சமர்வில், காபெக்ஸ், லெதண்டி மற்றும் காசல்ரீ போன்ற தோட்டங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்' என்றார்.

'அதுபோல, டங்கல் தோட்ட மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு, எதிர்காலத்தில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .