2024 மே 08, புதன்கிழமை

பலாங்கொடை நகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்றது

Editorial   / 2019 நவம்பர் 27 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை நகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு, தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை நகரசபை அமர்வு, சபைத் தலைவர் சாமிக்க விமலசேன வெவேகெதர தலைமையில் நடைபெற்றபோது, பாதீடும் சபையில் சமர்பிக்கப்பட்டது.

இதன்போது, பாதீடு வாசிப்பின் பின்னர், சபையின் அனுமதி கோரி வாக்கெடுப்புக்காக விடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 6 பேரும் பாதீட்டுக்கு சார்பாக வாக்களித்த போதிலும், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 7 பேரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் 3 பேரும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரம், பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து, 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டது.

இச்சபையின் கடந்த மாதக் கூட்டத்தின் போது, பொதுஜன முன்னணியின் உப தலைவர் எம்.டி.எம். ரூமி, சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தி, இது வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவிலிருந்து, தமது மூன்று உறுப்பினர்களும் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X