2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் சேவைக்கு 144 ஆண்டுகள் நுவரெலியாவில் விசேட நிகழ்வு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 144 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நுவரெலியாவில்  ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் , கடமையில் இருக்கும் பொழுது உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

நிகழ்விற்கு வருகை தந்த  மத்திய கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் ஜயன்த கம்மம்பில ,  நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி நவரட்ணவிற்கு நுவரெலியா பொலிஸ் நிலைய நிர்வாகப் பொறுப்பதிகாரி எம். செல்வகுமார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அணிவகுப்பு மரியாதை செலுத்துவதையும் அதனை பொலிஸ் உயர் அதிகாரிகள் இருவரும் ஏற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .