2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் 2ஆவது ஆட்சி காலத்தில் தோட்ட தொழிலாளர் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட வேண்டும்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இண்டாவது பதவி காலத்தின் போது சமர்ப்பிக்கப்பட உள்ள  வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வுக்கு வழிகோலப்படுமென எதிர்பார்ப்பதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

ஜனாதி மஹிந்த ராஜபக்ஸவின் 65 ஆவது பிறந்த தினம் மற்றும் இரண்டவது முறையாக ஜனாதிபதி பதவி ஏற்பு தொட்ரபாக வெளியிட்டுள்ள வாழத்துச் செய்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

'இந்த நாட்டின் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி சார்பாகவும் மலையகத்தமிழ் மக்கள் சார்பாகவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாட்டின் பொருளாதார சுபீட்சத்துக்காக உழைத்துவரகின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கெற்ற ஊதியத்தினை எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் வழிகோல வேண்டும்.

அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்திர அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுத்து இலங்கை அரசியல் வரலாற்றில் தடம் பதிக்க வேண்டும் எனவும்  எனது வாழத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .