2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்தில் கோழிகளுக்கு 'ரெனிகட்' வைரஸ் நோய்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்தில் கோழிகளுக்கு 'ரெனிகட்' என அழைக்கப்படும் ஒருவகை வைரஸ் நோய் பரவி வருவதாக மத்திய மாகாண மிருக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

மத்திய மாகாண மிருக வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.ஜே.விக்கிரமசூரிய இது தொடர்பாக தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில்... 'மேல் மற்றும் வடவேல் மாகாணங்களில் பெரிதாக பரவிய இந்நோயினால் 50,000இற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. தற்போது மத்திய மாகாணத்தில் அக்குறணை பிரதேச செயலக பிரிவிலே இந்நோய் பரவலாக பரவியுள்ளது...' என்று அவர் தெரிவித்தார்.

வைரஸ் ஒன்றின் மூலம் தொற்றும் இந்நோய்க்கு எவ்வித மருந்தும் இதுவரை இல்லாததன் காரணமாக உங்களுடைய கோழிகளை இழக்க நேரிடலாம். எனவே தமது கோழிகளை தமக்கு நெருங்கிய மிருக வைத்திய நிலையத்துக்கு முன்கூட்டியே கொண்டு சென்று ஊசி ஏற்றிக் கொள்ளுமாறும் மத்திய மாகாண மிருக வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.ஜே.விக்கிரமசூரிய மேலும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .