2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கணினிகள் இல்லாத பாடசாலைகளுக்கு கணினி வசதி: மத்திய மாகாண முதலமைச்சர்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்தில் இது வரை 611 பாடசாலைகளுக்கு கணினி கூடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்குவது சம்பந்தமாக தமிழ்மிரர் இணையத்துக்கு தகவல் தருகையிலேயே முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

மத்திய மாகாணத்திலுள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான அனைத்து மாணவர்களுக்கும் கணினி அறிவை வழங்குவதற்கு மாகாணசபை ஏற்பாடு செய்துள்ளதாகவும் மாகாணத்தின் பாடசாலைகளுக்கு பல திட்டக்களின் கீழ் கணினி கூடங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரை அவ்வாறான கணினி கூடங்கள் 611 திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு கணினி அறைக்கு ரூபா 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

10 முதல் 20 கணினிகள் வரையிலான கணினி கூடங்கள் அமைக்க முடியாத பாடசாலைகளுக்கு குறைந்தது ஒரு கணினியேனும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .