2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அனுருத்த ரத்வத்தவின் இறுதிக் கிரியைகள்

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக், சி.எம்.ரிஃபாத்)

நேற்று வியாழக்கிழமை மரணமடைந்த முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4 மணிக்கு, அவர்களது குடும்ப மயானமான நித்தவெல மயானத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெனரல் அனுருத்த ரத்வத்தை 1994ஆம் ஆண்டிலிருந்து மின்சக்தி, சக்திவள அமைச்சராகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் செயல்பட்டவர். ஸ்ரீமாவோ பண்டார நாயகாவின் சகோதரரான இவர் வடபகுதி யுத்தம் தொடர்பாக புரட்சிகர மாற்றங்களை மேற்கொண்டவர்.

2001ஆம் ஆண்டு டிசெம்பர் ஐந்தாம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மடவலை இளைஞர்கள் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராக இருந்த இவர், அண்மையில் விடுதலையானார். இவரது மரண செய்தியினைக் கேள்விப்பட்ட கண்டி நகர மக்கள் - நகர வீதிகளில் வெள்ளைக் கொடி பறக்க விட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் வைத்து வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு அவசர சத்திரசிகிச்சை மேற் கொள்ளப்பட்டபோதிலும் அது பயனளிக்காது அனுருத்த மரணமானார்.

இவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கண்டி மஹய்யாவையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.11.2011) கண்டி நித்தவலை குடும்ப மயானத்தில் ஈமக் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.

73ஆவது வயதில் மரணத்தினை தழுவிய அனுருத்த ரத்வத்த - கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை மற்றும் கண்டி மேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .