2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவின் வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 31 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியாவின் வசந்தகால நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.

நுவரெலியா மாநகரசபை முதல்வர் மஹிந்த பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கலந்துகொள்வதோடு சிறப்பு விருந்தினராக அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் கலந்துகொள்கின்றனர்.

வருடந்தோரும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஒட்டப்போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கட் சுற்றுப் போட்டி, கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டி, கிரகறிவாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதான்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் நடைபெறவுள்ளன.

இந்த வருடம் ஏனைய வருடங்களைவிட அதிகமான உல்லாச பிரயாணிகள் வருகை தருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தெரிவிக்கின்றார்.

வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கான வாகன தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் குறிப்பிடுகின்றார். பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை உல்லாச பிரயாணிகளாக வருபவர்கள் நுவரெலியாவின் இயற்கையையும் அதன் சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
பொலிதீன் மற்றும் கலிவுப் பொருட்களை அதற்காக ஒதுக்கப்பட்ட  இடங்களில் மாத்திரம் போடுமாறும் பாதைகளில் போடுவதன் மூலம் தண்டனைக்குட்பட வேண்டி வரும் எனவும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த வருடங்களைவிட இந்த வருடம் சூழுல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் நகர முதல்வர் தெரிவிக்கின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .