2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பதுளை மாவட்ட தமிழ் மக்களுக்கு நன்றி: அரவிந்தகுமார்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

பதுளை மாவட்டம் சார்பாக ஆகக்கூடிய விருப்பு வாக்குகளால் நாடாளுமன்றத்துக்கு என்னை தெரிவு செய்த பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த, உணர்வு பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்' என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப-தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளருமான அ.அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'என்னை பொறுத்தவரையில், எந்தவொரு அரசியல் சக்தியின் பலமில்லாமல், தனிநபராக தமிழ் பேசும் மக்களின் சக்தியை முன்னிலைப்படுத்திய வகையில் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக களமிறங்கினேன்.

மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் என்மீது வைத்திருந்த அபார நம்பிக்கையின் பயனாக 53,741 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு  தெரிவாகியுள்ளேன். ஆரம்பத்தில் நான் பதுளை மாவட்டத்துக்கு பிரவேசித்ததும் ஊவா மாகாணசபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று மாகாணசபைக்கு தெரிவானேன். அக்கால பகுதியில், என்னால் இயன்றவரையில், எமது மக்களின் மேம்பாடுகளுக்காக பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டேன். ஆனாலும் அடுத்து வந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு, ஊவா மாகாணசபைக்கு தெரிவாக முடியவில்லை.

அதன் பின்னரே ஐ.தே.க வில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக பதுளை மாவட்ட பட்டியலில் போட்டியிட்டேன். இத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை எமது மக்கள் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். இந்த வெற்றியானது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்களினால் கிடைத்த பேரங்கிகாரமாகும்.

இவ்வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்துக்கு செல்லும் நான், எமது மக்களுக்கான அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இயன்ற வரையில் முன்னெடுப்பேன் என்றும், எமது மக்களின் எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலும், அம்மக்களது அபிலாசைகள், விருப்புகள், தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய பாடுபடுவேன் என்று உறுதி கூறுகின்றேன்.   

எனக்கு வாக்களித்த எம்மவர்களான அதிபர்கள், ஆசிரியர்கள், புத்திஐPவிகள், ஊடகவியலாளர்கள், சமூக நலன்விரும்பிகள், நகர வர்த்தக பிரமுகர்கள், சமூக முக்கியஸ்தர்கள், மலையக மக்கள் முன்னணியின் அலுவலக உத்தியோகஸ்த்தர்கள், பெருந்தோட்டத்துறை மக்கள், தோட்டக்கமிட்டித் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், அரச மற்றும் தனியார்துறை உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் சகோதர இனத்தவர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .