2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தலில் தோல்வியுற்றதால் இ.தொ.கா.வுக்கு பின்னடைவில்லை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் மாபெரும் விருட்சமாகவும் இந்த நாட்டு அரசியலில் பெரும் சக்தியாகவும் உருவெடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் பின்னடையவில்லை.  தேர்தலில் வெற்றி - தோல்விகளை சகஜமாக மதிக்கும் மனப்பாங்குடைய இக்கட்சி, எப்படியும் இழப்புகளை ஈடு செய்துவிடும் என்ற நம்பிக்கையுடன்,  முனைப்போடு செயற்பட்டு வருகின்றது என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் மலையகத்தில் ஆறு மாவட்டங்களில் இ.தொ.கா போட்டியிட்டது. இதனால் அடைந்த பெறுபேறுகள் குறித்து இ.தொ.கா அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. சாதக, பாதக முடிவுகளுக்கான அடிப்படை காரணங்களை இ.தொ.கா உயர்மட்டம் வெகு ஆழமாக ஆராய்ந்து வருகின்றது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளை ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான காத்திரமான பணிகளை இ.தொ.கா பரவலாக மேற்கொண்டு வருகின்றது. இந்த மாவட்டங்களில் தற்போதைய செயற்பாடுகளில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும்; இடையூறுகளை களைவதற்கும் இ.தொ.கா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
 
அன்றும் இன்றும், மலையக மக்களுக்காக தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காலத்துக்கு ஏற்ற அத்தியாவசியமான திட்டங்களை வகுத்து அதனை பரவலாக செயற்படுத்தி வரும் இ.தொ.கா, தோட்டவாரியாக அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்ததுவதற்கான செயற்திட்டங்களிலும்; ஈடுபட்டு வருகின்றது. தோட்டத் தொழிலாளர் மத்தியில் சமூக, கலை, கலாசார, அரசியல் தத்துவார்த்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு பயிற்சி பாசறைகளையும் நடாத்துவதற்கு இ.தொ.கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இது இவ்வாறிருக்க, நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்த குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வாக்காளர் பெருமக்களுக்கு இ.தொ.கா தமது நன்றிகளை தெரிவித்துகொள்கின்றது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .