2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

பலாங்கொடை நகர சபையின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டமானது,   மாகாணத்திலுள்ள ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதோடு, ஏனைய உள்ளூராட்சி சபைகளில் இவ்வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.

பலாங்கொடை நகர சபையின் மூலம் பலாங்கொடை பெங்கியவத்த பிரதேசத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டத்தை, நேற்று முன்தினம்(6) நேரில் சென்று பார்வையிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் கழிவுப் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் சிறந்த இடமாக, பலாங்கொடை நகர சபை விளங்குகிறது என்றும் பாலங்கொடை நகர சபையின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள எம்பிலிபிட்டிய, கேகாலை ஆகிய இரண்டு நகர சபைகள் உட்பட 25 பிரதேச சபைகளிலும் உள்ளடக்கி விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

பலாங்கொடை நகர சபையின் மூலம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டத்தின் மூலம், நாளாந்தம் 15 டொன் கழிவு பொருட்கள், 15,000 மலசலகூட கழிவுகள் மீள் சுழற்சி செய்யப்பட்டு, அதன்மூலம் வருடத்துக்கு 25 இலட்சம் ரூபாய் வருமானத்தை, பலாங்கொடை நகரசபை பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பலாங்கொடை நகர சபையின் தலைவர் சம்பிக்க விமலசேன, பலாங்கொடை நகர சபை உறுப்பினர்கள், மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் உதவி ஆணையாளர் சமன் குமார மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உட்பட அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .