2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மும்மொழி தேசிய பாடசாலை துரிதமாக அமைக்கப்படும்’

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலையகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மும்மொழி தேசிய பாடசாலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நானுஓயா பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய மும்மொழி தேசிய பாடசாலையை அமைப்பதற்கான பணிகளை, கல்வியமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து, அமைச்சர், இன்று  பார்வையிட்டார்.

இதன்போது உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மலையக கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலை நிர்மாணப் பணிகளையும் துரித கதியில் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

இராதாகிருஷ்ணனின் வேண்டுக்கோளுக்கமைய மலையகத்தில் புதிய மும்மொழி தேசிய பாடசாலை அமைப்பதற்கு கடந்த ஆண்டு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டது.

அதன்படி, சுமார் 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்புதிய பாடசாலை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .