2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லிந்துலை வைத்தியசாலை 2ஆவது நாளாகவும் ஸ்தம்பித்தது

மு.இராமச்சந்திரன்   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் சிற்றூழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால், இன்று  (14), இரண்டாவது நாளாகவும் வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

நிர்வாகத்துக்கு இடையூறு விளைவிக்கு வகையிலும் நோயாளர்களை முறையாக கவனிக்கத் தவறும் வகையிலும் செயற்பட்ட தாதியொருவரை இடமாற்றம் செய்யக்கோரி, திங்கட்கிழமை (13) முதல், குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்களும் சிற்றூழியர்களும் மருத்துவ விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

குறித்த தாதி, நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபடுகின்றமையினால் குறித்த தாதியை இடமாற்றம் செய்யும் வரை தாம் பணியில் ஈடுபடப்போவதில்லை எனவும், வைத்தியர்களும் சிற்றூழியர்களும் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இந்த மருத்துவ விடுமுறைப் போராட்டத்தில், 20பேர் ஈடுட்டுள்ள நிலையில் 7 தாதியர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நோயாளர்களின் நலன்கருதி, நுவரெலியா மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினால் குறித்த வைத்தியசாலைக்கு, தற்காலிகமாக வைத்தியர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர், அவசர சிகிச்சை மற்றும் வெளிநோயாளர் பிரிவு நோயாளிகளை மாத்திரமே பார்வையிட்டு வருகின்றார்.

எனினும், சர்ச்சைக்குள்ளாகியுள்ள தாதியை இடமாற்றம் செய்யும் வரை தாம் மருத்துவ விடுமுறையில் ஈடுபடப்போவதாக, லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .