2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குகை தொடர்பில் அறிக்கை கோருகிறார் கல்வியமைச்சர்

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை - பாஹியன்கல மலைக்குகை, மண்சரிவு ஏற்பட்டு, சிதைவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் பல்துறை அறிக்கையைக் கோரியிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

தொல்பொருள், பொறியியல் மற்றும் கட்டடக் கலை முதலான துறைகள் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையுடன், இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

பாஹியன்கல மலைக்குகைக்குச் சென்று, அதன் நிலைமை நேரில் கண்டறிந்த பின்னரே, அமைச்சர் ​மேற்கண்டவாறு அறிக்கையைக் கோரியதுடன், குகை பற்றிய மேலதிகத் தகவல்களையும் கேட்டறிந்துகொண்டார்.

கடந்த வாரம் நாட்டின் பல இடங்களிலும் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் மற்றும் இந்த மலைக்குகையை அடுத்துள்ள மலைப் பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளின் போது, பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடல் மட்டத்திலிருந்து 1010 அடி உயரத்திலுள்ள இம்மலைக்குகையும் அண்மித்த மேட்டு நிலப்பகுதிகளும், மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலைமையையடுத்து, பாஹியன்கல மலைக்குகை பெளத்த விகாரையில் தங்கியிருந்த 30 பிக்குகள் உட்பட அருகாமையில் வசித்து வந்த 21 குடும்பங்களும், அவ்விடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர்.

இப்பிரதேசத்துக்கு சென்றுள்ள இலங்கையின் பிரபல தொல்பொருள் வரலாற்றாசிரியர்கள், கட்டட ஆராய்ச்சிகள் நிறுவனம், புவிச்சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றின் நிர்வாகதுறைசார் அதிகாரிகள், இடத்தைப் பாதுகாப்பது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஹியன்கல குகையானது 58 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுவதுடன், உலகின் மிகப்பழமை வாய்ந்த எலும்புக்கூடு ஒன்றும், இந்த மலைக்குகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .