2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பில் ஈரான் திரைப்பட விழா

A.P.Mathan   / 2011 ஜனவரி 25 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனமும் ஈரான் உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து 'ஈரான் திரைப்பட விழா'வினை கொழும்பில் நடத்தவுள்ளனர். எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதிவரை இத்திரைப்பட விழா இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன திரையரங்கில் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன தலைவர் குமார் அபேசிங்க கருத்து தெரிவிக்கையில்...

'ஈரான் தேசிய தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதிவரை ஈரான் திரைப்படங்கள் சிலவற்றினை திரையிடவுள்ளோம். ஈரானின் பிரசித்தமான திரைப்பட இயக்குநர் திருமதி புரான் டிரெக்ஷெண்டி அவர்களின் இயக்கத்தில் உருவாகிய ஐந்து படங்கள் திரையிடப்படவுள்ளன.

திரைப்பட கலையில் முன்னணியில் இருக்கின்ற நாடு ஈரான். அவர்களின் திரைப்படங்கள் உலக பிரசித்தமானவை. தொழில்நுட்பத்திலும் அவர்கள் முன்னிற்கிறார்கள். அந்தவகையில் அவர்களின் திரைப்பட தொழில்நுட்பங்களையும் கலை நுட்பங்களையும் நமது கலைஞர்கள் மத்தியில் அறியவைப்பதற்கு இந்த திரைப்பட விழா நல்லதொரு களமாக இருக்கும்.

உலக மக்களின் மொழிகள் வேறாக இருப்பினும் உணர்வுகள் எல்லோருக்கும் ஒரேமாதிரியானவையே. அந்தவகையில் உணர்வுகளின் வெளிப்பாடான ஈரான் திரைப்படங்களை நமது மக்கள் மத்தியிலும் கலைஞர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்துவதே இந்த 'ஈரான் திரைப்பட விழா'வின் நோக்கமாகும்' என்று குறிப்பிட்டார்.

பெப்ரவரி 7ஆம் திகதி மாலை 6 மணிக்கு Love Without Frontier என்னும் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இப்படத்தினை அழைப்பிதழ் உள்ளவர்கள் மாத்திரமே பார்க்க முடியும். பெப்ரவரி 8ஆம் திகதி Children of Eternity, பெப்ரவரி 9ஆம் திகதி Twenty, பெப்ரவரி 10ஆம் திகதி Wet Dreams, பெப்ரவரி 11ஆம் திகதி Lost Time ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து திரைப்படங்களையும் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன திரையரங்கில் இலவசமாக மாலை 6 மணிக்கு கண்டு களிக்கலாம். Pix: Waruna Wanniarachi


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .