2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேச ரீதியாக நியாயம் தேட நேரிடும்: பாரத லக்ஷ்மனின் மகள்

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது தந்தையைக் கொன்ற கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அதிகாரிகள் தவறினால், சர்வதேச ரீதியாக நியாயம் தேட தமது குடும்பம் நிர்ப்பந்திக்கப்படும் என பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு. நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பொலிஸாரின் அனுமதி பெறாமல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றமை கேள்விக்குரியது எனவும் தனியார்தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் ஹிருனிகா பிரேமச்சந்திர கூறினார்.

தனது தந்தையை கொன்றவர்களை இயற்கை தண்டிக்கும் எனவும் அவர் கூறினார்.

எவ்வாறெனினும் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ மற்றும் கொலன்னாவை தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளரான அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் மீது இன்னும் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • ameerudeen Tuesday, 15 November 2011 08:42 PM

    சத்தியம் எப்போதும் பொய்த்ததில்லை. பொறுத்திரு ஹிருனிக்கா.

    Reply : 0       0

    UMMPA Wednesday, 16 November 2011 05:34 AM

    ஏன் மற்றவரின் பெயர் விடுபட்டது! நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறிர்கள் . உங்கள் பயணம் தொடர வேண்டும்.

    Reply : 0       0

    jambavan Wednesday, 16 November 2011 05:41 AM

    இயற்கை தண்டிக்கும் .....நம்பினார் கெடுவதில்லை.

    Reply : 0       0

    Rauf Wednesday, 16 November 2011 07:31 PM

    சிங்களத்துக்கே இந்த நிலை என்றால் எங்களுக்கு எப்படி இருக்கும்? சொல்லியா புரியணும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .