2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈரான் நீதிதுறைத் தலைவர் - ரவூப் ஹக்கீம் சந்திப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரான் நீதிதுறைத் தலைவர் ஆயதுல்லாஹ் சாதிக் அமோலி லர்ஜானி, நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மனித உரிமைகள் தொடர்பில் சில மேற்கு நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரானும், இலங்கையும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச அரங்குகளில் ஒருமித்த நிலைபாடுகளை கொண்டிருந்ததை அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, மனித உரிமைகள், சட்டமுறைமைகள், அரசியல் விவகாரம் என்பன தொடர்பில் விரிவான  உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இவ் உரையாடலின்போது, ஈரானின் நீதியமைச்சர் செய்யித் மொர்தெஸா பக்திஅரி, நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசனலி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம்சல்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .