2024 மே 02, வியாழக்கிழமை

பலாலிக்கு விரைந்த அர்ஜுன

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர், இன்று (05) நேரில் சென்று ஆராய்ந்தனர். 

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து ஆரம்பச் சேவைகள், ஒக்டோபர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அதற்கான அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. 

விமான நிலைய அபிவிருத்தியின் போது, ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன், பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளது. 

இந்நிலையில், இந்த அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடும் முகமாக, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர், நேற்றுக் காலை பலாலிக்கு விஜயம் மேற்கொண்டனர். 

அந்தக் குழுவில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .