2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மத்திய - மாகாண அரசாங்கங்கள் இணைய வேண்டும்'

George   / 2017 மே 20 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வீழ்ச்சியடைந்த வடக்கின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப, மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் இணைந்த, பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளதாக பிரதமர், யாழில் தெரிவித்தார்.

அரச பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் மற்றும் யாழ். மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, வடக்கில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

“வடக்கில் 25 வருடமாக நிலவிய யுத்தத்தின் பின்னர் வடக்கின் எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத நிலையில், அபிவிருத்தியும் பொருளாதார பங்களிப்பும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டினை வேகமாக அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் அழிக்கப்பட்டுள்ள வடக்கின் பொருளாதாரத்தினைக் கட்டி எழுப்ப வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 6 வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில்,  வடக்கின் பங்களிப்பு மிகவும் அவசியம். வடக்கின் பொருளாதார வளர்ச்சி பிரதிபலிப்பு சப்பிரகமுக மற்றும் தென்மாகாணத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

அதனால், வடக்கின் ஏற்படும் பாதிப்பினை ஏனைய மாகாணங்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துவதனால், ஏனைய மாகாணங்களின் சம அளவில் வடக்கில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி 6 வீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். மற்றைய பகுதிகளை பார்க்கும் போது, வடக்கின்  பொருளாதாரத்தினைக் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் மத்திய அரசாங்கத்திற்கு இருக்கின்றது. வடக்கின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தினால் மாத்திரமே சப்பிரகமுவ மற்றும் தென்மாகாணத்திற்கும் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

வடக்கின் பொருளாதாரத்தினை கட்டி எழுப்ப வேண்டுமாயின், இங்குள்ள உட்கட்டமைப்பு, காணி மற்றும் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு மத்திய மற்றும் மாகாணங்கள் தனியாக செய்ய முடியாது. எனவே, அபிவிருத்தியை மேற்கொண்டு பொருளாதாரத்தினை உயர்த்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தின் மாகாண இணைந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவுள்ளது” என, பிரதமர் தெரிவித்துள்ளார்.

“அத்துடன், அரசியல் ரீதியான பிரச்சினைகளும் இருக்கின்றன. அவற்றிற்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. இருந்தும், முதன்மையாக  வடக்கில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தினை கட்டி எழுப்ப பல விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு மத்திய மற்றும் மாகாண அரசுகள் தனித்துச் செய்ய முடியாது. அதற்குரிய இணைந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும். அந்த பொறிமுறையின் ஊடாக, பொருளாதார வீழ்ச்சியை உயர்த்த வடமாகாணத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றினைந்து வடக்கின் பொருளாதாரத்தினை முன்னேற்றிச் செல்வதற்கான செயற்பாட்டில் அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

எனவே, வடக்கின் பொருளாதார வீழ்ச்சியை கட்டி எழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்” என?, பிரதமர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .