2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மணல் அகழ்வு, மணல் கடத்தலைத் தடுப்பதற்கு சிறப்புப் பொலிஸ் பிரிவு

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமராட்சி கிழக்கில், சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வையும் மணல் கடத்தலையும் தடுப்பதற்கு, 30 பேர் கொண்ட சிறப்புப் பொலிஸ் பிரிவொன்றை, காங்கேசன்துறைப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீர நியமித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு - குடத்தனை, பொற்பனை, மணற்காடு ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு மாத காலப் பகுதியில், பெருமளவான மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமானமுறையில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வைத் தடுப்பதற்கு, பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென்று குற்றச்சாட்டும் மக்கள், அவர்களே நேரடியாக களத்தில் இறங்கி, மணல் கடத்தல்களைத் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடமராட்சி கிழக்கில், சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வையும் மணல் கடத்தலையும் தடுப்பதற்கு, 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவொன்று, காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .