2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


யுத்த சூழ்நிலையில் யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபை ஆற்றிய பங்கும் பணிகளும் பாராட்டுக்குக்ப்யவை எனவும் கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தா.

யாழ்.வீரசிங்கம் மண்;டபத்தில் 88 ஆவது சர்வதேச கூட்டுறவாளார் தின விழாவில் பிரதம விருந்தினராக  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தொப்வித்தார்.

அவார்  மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையில் யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை மக்களுக்கு சிறப்பான பணிகளைச் செய்திருந்தமை பாராட்டுக்குரியது.

யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையானது ஒரு கால கட்டத்தில் ஏனைய கூட்டுறவுச் சபைகளையும் விட முதன்மையாகத் திகழ்ந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

எனவே, எதிர்காலத்திற்கேற்ற வகையில் கூட்டுறவுச் சபையின் அபிவிருத்தியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு புதிய சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதுடன் முன்னரைப் போல் அதற்கு முழு ஒத்துழைப்பையூம் வழங்க தயாராக இருக்கின்றேன் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

அத்தோடு எனது அமைச்சினூடாக குடாநாட்டில் பல்வேறு கைத்தொழிற் பேட்டைகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை கூட்டுறவு சபையையும் கட்டியெழுப்பி அதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் நலன்சாபு விடயங்களில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அத்துடன் வீரசிங்கம் மண்படம் சகல வசதிகளுடன் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.

இநிகழ்வில், இலங்கைத் தேசிய கூட்டுறவுச் சபை தலைவர் பந்து ரணவக்கவும் கலந்து கொண்டார், யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபை தலைவர் இ.ராஜாராம் உட்பட பல்ர் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .