2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். குடாநாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு அமைய அரசாங்கம் சிவப்பு நாட்டரிசிக்கு கிலோ அறுபது ரூபாவையும் சம்பா அரிசிக்கு கிலோ 75 ரூபாவையும் நிர்ணயிக்கப்பட்ட விலையாக அறிவித்ததையடுத்து யாழ். மாவட்ட வியாபாரிகள் அரிசியை பதுக்கியுள்ளனர்.

சகல கடைகளிலும் பழுதடைந்த பாவணைக்குதவாத அரிசியை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் மக்கள் தரமான அரிசியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முன்னர் சிவப்பு நாட்டரிசி கிலோ 70 முதல் 80 ரூபா வரையிலும் சம்பா அரிசி கிலோ 80 முதல் 90 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த விலைக்கே யாழ். வர்த்தகர்கள் இன்றும் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். எனினும் இன்று வரை யாழ்ப்பாணத்திலிருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .