2024 மே 08, புதன்கிழமை

யாழ். மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குள் நிரந்தர தீர்வு: டக்ளஸ்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு இன்னும் ஒரு மாத காலத்தில் நிரந்தரமான தீர்வினை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, கடற்படையினர், பொலிஸார், இராணுவத்தினருக்கும் இடையேயான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளாகள் தாம் கடலில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் கடலுக்கு செல்லும் தொழிலாளர்கள் சுதந்திரமான முறையில் தமது தொழிலைச்செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் கடற்படையினர் பாஸ் நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்து தமது தொழிலை மேற்க்கொள்வதில் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரம்பரிய கைத் தொழில்கள் அமைச்சர் தான் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு இன்னும் ஒரு மாத காலத்தில் இந்திய மீனவாகளின் பிரச்சனை சம்பந்தமாக உரியவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்வை எட்டித் தருவதாகவும் கடலுக்கு செல்வதில் உள்ள பிரச்சனைகளை கடற்படையினருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் மீன்பிடிச் சங்கங்களின் தலைவர்கள் கடற்தொழிலாளர்களினால் வரக்கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாக பொறுப்பெடுக்கும் சந்தர்ப்பத்தில் இதனை தளர்த்துவதற்;கு சாதகமாக கடற்படையினர் பரிசீலனைசெய்வதாகவும் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X