2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வடமாகாண கடற்றொழிலாளர் இயக்குநர்சபை கூடுகிறது

Suganthini Ratnam   / 2011 ஜூன் 08 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இயக்குநர்சபை எதிர்வரும் 10ஆம் திகதி ஒன்றுகூடி ஆராயவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக வடகடலில் இந்திய மீனவர்களின் கடல் நடமாட்டமும் வடகடல் வளங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதும் இடம்பெற்று வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியபோதிலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதனால் எமது கடல்வளங்களைப் பாதுகாப்பதற்கும் எமது மீனவர்களின் வாழ்வியல் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்கும் மற்றும் எதிர்காலத்தில் வடகடலில் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடியைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது பற்றி விசேடமாக ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .