2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். தாதியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை காலை முதல் 24 மணிநேர சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலையின் 250ற்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கடமைக்கு சமுகமளிக்காது தமது வீடுகளில் இருந்து சுகவீன போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக யாழ். போதனா வைத்திய சாலையின் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் என்.நற்குணரஜா தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி சுகாதார அமைச்சுடன் அரசாங்க தாதிய உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்கள் நடத்திய பேச்சுவார்;த்தையின் போது முன்வைக்கப்பட்ட 5 அம்ச கோரிக்கைகளுக்கும் தீர்வ கிடைக்காத பட்சத்தில் இன்று நாடாளாவிய ரீதியில் சுகவீன போராட்டம் நடாத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை, ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1779 ஆம் வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கு, தாதியர்களின் மேலதிக கொடுப்பனவை அதிகரி, லேதிக கொடுப்பனவுகளை ஊக்குவிப்பு கொடுப்பனவாக மாற்று பழைய சட்டத்திற்கமைய வகுப்புவாரி பதவி உயர்வினை உடனே பெற்றுக் கொடு, 5 நாட்களை வேலை நாட்களாக மாற்று போன்ற விடயங்கள் தாதியர்களினால் சுகாதார அமைச்சிடம் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டது.

இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் இன்று சுகவீன போராட்டத்தினை மேற்கொண்டுள்ளதாகவும், தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்தும் சகவீன போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தாதியர் சங்க தலைவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .