2024 மே 11, சனிக்கிழமை

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்பாட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இந்திய கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயக மாட்சிச, லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது 'கூடங்குளம் அணு உலை மக்களுக்கு பேரழிவு', 'கொல்லாதே கொல்லாதே கதிரியக்கத்தால் மக்களை கொல்லாதே', “இந்திய அரசே அணு உலையை உடனே நிறுத்து', “ஐரோப்பாவில் மூடுவிழா இந்தியாவில் திறப்பு விழா“, “புது டில்லிக்கு அபிவிருத்தி பொதுமக்களுக்கு பெருநாசம்' போன்ற கோசங்களை எழுப்பியவாறு 100இற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் புதிய ஜனநாயக மாட்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க.செந்தில்வேல் உரையாற்றும் போது...

“இந்த அணு உலைக்கு எதிராக மத்திய மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராடிவருகின்றார். அந்த மக்களுக்கு ஆதரவாக எமது அரசியல் தலைவர்கள் ஒருவர் கூட எதிர்ப்பைக்காட்ட முன்வரவில்லை. இலங்கை தமிழர்களுக்காக முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை தீக்குளித்து தங்கள் உயிர்களை தியாகம் செய்திருக்கின்றார்.

அத்தகைய மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்னும்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். அவர்கள் இந்தியாவின் நலனிற்காக இதில் கலந்துகொள்ளவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை விளங்கிக்கொள்ளாத தலைவர்களாகத்தான் எமது அரசியல் தலைவர்கள் இருக்கின்றார். பதவிகளுக்காக அரசியல் நடத்துக்கின்றார்களே தவிர மக்களின் நலனிற்காக அவர்கள் அரசியல் நடத்தவில்லை. எமது மக்களுக்கு ஏற்படக்கூடிய அநீதிகளுக்கு எதிராக எமது கட்சி தொடர்ந்து போராடும்.

இந்திய பல்தேசிய கம்பனிகளின் நன்மைக்காக தமது மக்களை அழிவுக்குள் தள்ளப்பார்க்கின்றது. அந்த அணு உலையால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் விழிப்புணர்வுப் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று குறிப்பிட்டார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .