2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தான் ஏன் போட்டியிடவில்லை: டக்ளஸ் விளக்கம்

Kogilavani   / 2013 ஜூலை 31 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

'ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை' என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.கிறீன்கிராஸ் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 'வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடமால் ஒதுங்கிக்கொண்டது ஏன்?' என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி  முடிப்பதற்காகவும் நான் வெளியில் நின்று முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதியுடன் கதைத்து யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தீர்மானித்துக்கொள்வோம்' என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • kampan Wednesday, 31 July 2013 10:34 PM

    வாழ்க...

    Reply : 0       0

    jeyarajah Thursday, 01 August 2013 04:10 AM

    அமைச்சர் அவர்களே, நீங்கள் ஜனாதிபதி கேட்பதற்கு அமைவாகவே எல்லாம் செய்வீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். ஆனால் நீங்களும் ஜனாதிபதி அவர்களும் முதலமைச்சர் பதவி சம்பந்தமாக கதைப்பதற்கு தமிழ் மக்கள் இம்முறை எதையும் மிச்சம் வைக்க மாட்டார்கள்...

    Reply : 0       0

    gdeva Thursday, 01 August 2013 04:41 AM

    தோல்வியை முன் கூட்டியே அறிந்து கொண்டு தானே போட்டி இடவில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .