2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் நாட்டின் தீர்மானத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேற்பு

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடு தொடர்பில் தமிழ் நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இந்தியப் பிரதமர் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் நாடு சட்ட சபையில் கடந்த வியாழக்கிழமை தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கேனும் அம்மாநாட்டில் அமையக்கூடாது. தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களவர்களுக்கு இணையாகவும் இலங்கையில் வாழக்கூடிய சூழலை இலங்கை அரசு உருவாக்கும் வரையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கை தற்காலிகமாக நீக்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேற்பளித்துள்ளது. இது தொடர்பாக குறித்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தமிழ் நாட்டு சட்ட சபை தீர்மானம் ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்களுக்கும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ஈழத் தமிழர்களுடைய இனப்பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் அந்த சர்வதேச சமூகத்தை சரியாகக் கையாள்வதிலேயே எமது உரிமைப் போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.

சர்வதேச சமூகம் என்கின்றபோது இந்தியாவும் மேற்கு நாடுகளும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசை எமக்கு சதாகமான நிலைப்பாட்டை எடுக்கவைக்கக் கூடிய ஒரே சக்தி தமிழ்நாடு ஆகும்.

அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு அணிதிரண்டு ஈழத் தமிழர்களுடைய இன அழிப்புக்கு எதிராகவும், அவர்களது சுயநிர்ணய உரிமையின் அங்கீகாரத்திற்காகவும் தொடர்ந்து செயல்ப்பட்டால் இந்திய மத்திய அரசு அதற்கு செவிசாயக்க நிர்ப்பந்திக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .