2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பனம் கைப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா
 
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் பயிற்சிகளைப் பெற்ற யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 134 பேருக்கு தலா 10,000 ரூபா பெறுமதியான கைப்பணி உபகரணங்கள் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன. 

 இதில், பனை அபிவிருத்தி சபையின் யாழ். மாவட்ட கைப்பணியாளர்கள் 60 பேருக்கும், தேசிய வடிவமைப்பு நிலையத்தின்; கீழ் 56 பேருக்கும், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 10 பேருக்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் 8 பேருக்குமாக மொத்தம் 134 பேருக்கு பனம் கைப்பணி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநயக்கே, அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .