2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பணம் இல்லையேல் பொருளாதாரம் இல்லை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


பணம் இல்லையேல் பொருளாதாரம் இல்லை. பொருளாதாரம் இல்லாவிடின், சமுதாயத்தை நிரப்ப முடியாதென சிக்காக்கோ இலினோயிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் தெரிவித்தார்.

யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இன்றைய இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியுமென்ற எண்ணம் உள்ளதை நான் இங்கு உணர்ந்துகொண்டேன்.

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட நான், சாவகச்சேரி றிபேட்டிக் கல்லூரியில் கல்வியை முடித்துவிட்டு  அமெரிக்க சிக்காக்கோவில் பேராசிரியராக கடமையாற்றுகிறேன்.  நான் கற்கும் காலத்தில் பெற்றோரிடம் காசு கேட்டால் காணியில் தென்னை, மாங்காய் போன்றவை உள்ளன. அவைகளை விற்று காசு எடுக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு அந்நேரத்தில் நாம் அதனைச் செய்தோம்.

தற்போதைய  இளம் சமுதாயத்தினர் எங்களால் இது  முடியுமென்று நினைத்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். இதற்கு உங்களால் முடியுமென்று பெற்றோர்களும் ஊக்கப்படுத்திக் கூறவேண்டும்.

மேலும், சூரிய சக்தியை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான செயற்றிட்டத்தை  முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சூரியகல மின்சக்தியினூடாக இங்கு  பொருளாதாரத்தை உறுதியாக உயர்த்த முடியும்.

எவ்வேலையையும் காசுக்காக செய்யவில்லையெனக் கூறக்கூடாது.  காசுக்காக நாம் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளுக்கு கூறவேண்டும். வைத்தியராகவும் பொறியியலாளராகவும் பிள்ளைகளை படிக்கவைக்க பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால்,  பிள்ளைகள் என்ன படிக்க நினைக்கின்றனரோ, அதற்கே விட வேண்டும். அதற்கான உந்துசக்தியை பெற்றோர் வழங்க வேண்டும்.

எப்போதும் எதையாவது செய்ய முயலவேண்டும், அவற்றின் மூலம் தேவைப்பாடுகளை பூரணப்படுத்த  நினைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பார்த்து அவற்றில் என்ன விடயங்கள் உள்ளனவெனக் கண்டுபிடிக்க வேண்டும்.

இன்று செய்யவேண்டிய செயல்களை இன்றே செய்யவேண்டும். நாளை செய்கிறேனெனக்  கூறக் கூடாதென்பதுடன், எவருடைய முயற்சிகளையும் மழுங்கடிக்கவும்  கூடாது.

எதிர்காலத்தில் மாணவர்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்பத்தை,  அறிவை  மேம்படுத்துவதற்காக விசேட பாடநெறி வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பாடநெறி பல்கலைகழங்களினூடாக செயற்படுத்தப்படுததப்பட்டுள்ளது' என்றார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கு முன்னராக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது  அலுவலகத்தில் சிவலிங்கம் சிவானந்தன் சந்தித்தார்.  இதன்போது, சிவலிங்கம் சிவானந்தனுக்கு  ஆளுநர் நினைவுச்சின்னம் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .