2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இராணுவம் வெளியேறும்வரை குரல்கொடுப்போம்: ஐங்கரநேசன்

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'எமது நிலங்களை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும். அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்போம்' எனவும் வடமாகாண விவசாயத்துறை  அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரியும், கிளிநொச்சியில் இடம்பெறும் நில அபகரிப்புக்களை நிறுத்தக்கோரியும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே விவசாய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், 
'இராணுவம் தமிழர் நிலங்களையும் அவர்களது வளங்களையும் ஆக்கிரமித்து வைத்துள்ளது. விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக கிளிநொச்சியில் எத்தனையோ பண்ணை நிலங்கள் இராணுவத்தினரின் வசம் உள்ளதுடன் பெருமளவு வளங்கள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகள் இருந்தார்கள் என்று கூறி பெரும் தொகையான ஏக்கர் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்தும் வைத்துள்ளது.

இதனால், சொந்த இடங்களிலேயே மக்கள் அகதிகளாக வாழவேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது. ஆகவே இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலங்களை விட்டு விரைவாக வெளியேற வேண்டும். அது வரையிலும் நாங்கள் குரல் கொடுப்போம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .