2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண நிதியையே இணக்க அரசியல் செய்பவர்கள் செலவு செய்கின்றனர்: சரவணபவன் எம்.பி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்பவர்கள், வடமாகாண சபைக்கு வரும் நிதியையே எடுத்து செலவு செய்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

தமிழசுரக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையில் மாவட்ட மாநாடு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

வடமாகாண சபைக்கான நிதியே பொருளாதார அபிவிருத்தி அமைச்சாலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் செலவளிக்கப்படுகின்றது. வடக்குக்கான இருவழிப்பாதை திறக்கப்பட்டதன் பின்னர் தென்னிலங்கை வியாபாரிகள் வடக்கிற்கு படையெடுத்து வருகின்றார்கள்.

அவர்கள் வடக்கில் கோவில்கள், பாடசாலைகள், நடைபாதைகளில் அதிகமாக வியாபாரம் செய்கின்றனர். இதனால் நிரந்தரமாக வடக்கில் முதலீடு செய்யும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வட்டிக்கு பணம் பெற்று, அதை மீளச்செலுத்த முடியாமல் தற்கொலை செய்தும் தலைமறைவாகியும் வடக்கு வர்த்தகர்கள் வாழ்கின்றனர்.

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்கான தென்னிலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிக்கதையை ஆரம்பித்துள்ளார். ஐரோப்பாவுக்கு ரணில் விக்கிரமசிங்க சென்று, புலிகள் மீதான தடையை எடுத்துள்ளதாக புலிக்கதையை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் நீதித்துறையில் தலையிடுவது போல, ஐரோப்பாவிலும் தலையிடலாம் என ஜனாதிபதி நினைக்கிறார். இருந்தும் அது சாத்தியமில்லையென அவருக்கு நன்றாக தெரியும்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களை எங்களுக்கு எதிராக செயற்படவைக்கின்ற முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .