2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஊழல் விசாரணைக்கு குழு நியமனம்: சந்திரசிறி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் 100 மில்லியன் ரூபாய் ஊழல் செய்தமை தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை உருவாக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

உலக வங்கியின் 3500 மில்லியன் ரூபாய் செலவில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வடக்கில் 120 வேலைத்திட்டங்கள், 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்களை வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் மேற்கொண்ட பொறியியலாளர் ஸ்டெயிலாநாதன் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கே இந்த விசாரணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இந்த விசாரணைக்குழுவில் கட்டிட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த பெண் அதிகாரியொருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு, எதிர்வரும் திங்கட்கிழமை (03) தங்கள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். மேற்படி ஊழல் நடவடிக்கையுடன் நேரடியாக தொடர்புபட்ட பொறியியலாளர்கள் உள்ளிட்ட சில அலுவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊழல் தொடர்பில் எத்தனை பேர் தொடர்புபட்டுள்ளனர் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரம் ஆளுநரால் தெரிவிக்கப்படவில்லை. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .