2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவேண்டும் - டெனீஸ்வரன்

Gavitha   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்கள் ஆகியோரின் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


கடந்த சில மாதங்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 3, 4 நாட்களாக அவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன.


அது மாத்திரமின்றி உள்ளூர் மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.


வல்வெட்டித்துறை கடற்பரப்பில் அதிகளவில் இவை இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக வடமாகாண மீன்பிடி அமைச்சு மத்திய அரசுடன் பேசவுள்ளது என அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .