2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'தென்மராட்சியின் பழச்செய்கையை பாதுகாக்கவேண்டும்'

Thipaan   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

தென்மராட்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பழச் செய்கைகளை காப்பாற்றுதல் மற்றும் உயிரியல் பல்வகையை பாதுகாக்கும் திட்டத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரியொருவர், செவ்வாய்க்கிழமை (03) கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

குரங்குகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்து பழவகைகளைக் காப்பாற்றி உயிர்பல்வகைமையையும் பாதுகாத்தல் என்றும் திட்டம் இதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்தத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல், மீசாலை பழமுதிர்ச்சோலை கேட்போர்கூடத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்றது.

வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், யாழ். விவசாய திணைக்கள அதிகாரிகள், தென்மராட்சி பிரதேச பழச் செய்கையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 3 நாட்களாக குரங்குகளின் நடமாட்டங்களை அவதானித்தாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கூறினர்.

கதடி தொடக்கம் எழுதுமட்டுவாள் வரையில் 30 தொடக்கம் 35 வரையான குரங்குகள் கூட்டமாகவும் மீசாலை சோலையம்மன் ஆலயப் பகுதியில் 100 தொடக்கம் 150 வரையான குரங்குகள் கூட்டமாக நுழைந்து பழங்களை நாசம் செய்கின்றன.

அப்பகுதி இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, குரங்குகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு கூண்டுகளில் பிடிக்கப்படுகின்றன. வௌ;வேறு கூட்டங்களைச் சேர்ந்தவற்றை ஒரே கூண்டுக்குள் அடைத்தால் அவற்றுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

தனித்தனியாக இல்லாமல், ஒரு கூட்டத்தை முழுவதுமாக பிடித்து அவற்றை ஒன்றாக வனங்களில் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் குரங்குகளை வனங்களில் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .