2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

George   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 


பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, திங்கட்கிழமை(09) தெரிவித்தார்.

யாழ். பிரதேச செயலக புதிய கட்டட தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், பொதுமகனை ஒரு வேலைக்காக பல தடவைகள் அலைக்கழிக்காதீர்கள். அக்காரியத்தை செய்ய முடியாவிடின் ஏன் செய்ய முடியவில்லை என்று பதிவேடு வைத்து எழுதுங்கள். 

மக்கள் பல தரப்பட்ட தமது தேவைகளுக்காக உங்களை தேடி வருவது அவர்களது உரிமை. அதனை செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அவ்வாறு கிராம அலுவலரால் செய்ய முடியாத காரியத்தை பிரதேச செயலாளர் செய்து கொடுக்கவேண்டும். 
நீண்ட இடைவெளியின் பின் நாங்கள் மக்களுடன் கைகோர்த்துள்ளோம். நாங்கள் புதிய பொருளாதார கொள்கை நோக்கி செல்லவேண்டும். எமது வரவு – செலவுத திட்டம் அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமைந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

100 நாட்கள் வேலைத்திட்டம் சிறந்த முறையில் நடந்தேற அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

விஜயகலா தமிழ் பெண்மணியாக இருந்தாலும் அவரை  நாட்டிலுள்ள அனைத்து பெண்களின் தலைவியாகவே பார்கின்றேன். அவர் தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றுவார் என்று நம்புகின்றேன் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .