2024 மே 11, சனிக்கிழமை

292 வர்த்தகர்களிடம் 1,128,500 ரூபா தண்டம்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான பொருட்களை விற்பனை செய்த 292 வர்த்தகர்களிடம் 11 இலட்சம் 28 ஆயிரத்து 500 ரூபா தண்டப் பணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவல்கள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் யாழ். மாவட்டத்திலுள்ள ஐந்து நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த மூன்று மாதங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகளில், செப்டம்பர் மாதம் 50 வர்த்தகர்களிடம் ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ரூபாவும் ஒக்டோபர் மாதம் 76 வர்த்தகர்களிடம் 3 இலட்சத்து 37 ஆயிரம் ரூபா தண்டமும் நவம்பர் மாதம் 166 வர்த்தகர்களிடம் 6 இலட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் அறவிடப்பட்டுள்ளதாக என பாவனையாளர் அலுவலக அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலக அதிகாரி மேலும் தெரிவித்தார்.                      

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .