2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘உயிருடன் இருக்கும் வரை நானே தலைவன்’

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“உயிருடன் இருக்கும் வரைக்கும் கொழும்பு மாநகரத்தின் தலைவன் தானே என்று யாழில் வைத்து மார்தட்டிய தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் கொழும்பு தனது கோட்டை என்றும் அங்கு தன்னை யாரும் அசைக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

யாழ்.கனகரத்தினம் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற தேசிய சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் துன்பங்களை, துயரங்களை, தேவைகளை, கேள்விகளை ஒவ்வொரு நாளும் சிங்கள தேசத்துக்குச் சொல்லிக் கொண்டுவருகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளை முதலில் சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழிவகைகளையே நான் எனது அமைச்சின் ஊடாக செய்து வருகின்றேன்.

இதனை நான் வட,கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதுக்காக செய்யவில்லை. நான் இங்கு வந்து தேர்தலில் போட்டியிடப் போவதும் இல்லை. இங்குள்ள மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்துள்ளனர்.

கொழும்பு மாநகரம் எனது கோட்டை. அதை எவரும் அசைக்க முடியாது. நான் இருக்கும் வரைக்கும் கொழும்பில் தலைவன் நான் தான். வேறு யாரும் தலைவனாக முடியாது.

நான் சிங்கள மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விடயங்களை தெரிவிக்கும் போதும், சிங்கள சகோதரர்கள் மாற்றுக் கருத்துக்களை கூறுவதில்லை” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .