2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டும்’

Editorial   / 2018 மே 28 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதுக்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (28) இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

இங்கு அவர் உரையாற்றுகையில்,

“யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும். இலங்;கையில் ஒன்பது மாகாணங்களிலும் வடக்கு மாகாணம் மிகவும் வேறுபட்டது. பல வருட யுத்தத்துக்கு பின்னர் இந்த மாகாணத்தை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது முக்கியமாகும்.

பொருளாதாரம் தொடர்பான அபிவிருத்தி, மீன்பிடி, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு போன்ற நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் குறைபாடுகள் இருக்கின்றன.

1977ஆம் ஆண்டு, மகாவலி அபிவிருத்தித்திட்டம் இருந்த போதிலும் இந்த காலநிலை மாற்றத்தின் பிரகாரம் சில நீர் வசதிகள் அருகி வருகின்றன.

மல்;வத்ஓயா ஊடாக வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்;;களுக்கு உதவிகள் கிடைத்தாலும் ஏனைய மாவட்டங்களையும் அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும்.

அனைவரும் இணைந்து எமது நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .