2024 மே 02, வியாழக்கிழமை

வலி.வடக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

படையினரால் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு பகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (17) பார்வையிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் எஸ்.சுகிர்தன், உறுப்பினர் கலையமுதன் உள்ளிட்டவர்கள் இன்று (17) காலை அந்தப் பகுதிகளுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

இதனிடையே வலி.வடக்கில் படையினரால் காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பல வீதிகள் இன்னமும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக ஆவளை சந்தியிலிருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடி சந்தி வரையிலான வீதியும் இன்னும் சில வீதிகளும் தொடர்ந்தும் மூடப்பட்டே காணப்படுகின்றன.

காணிகள் விடுக்கப்பட்டும் மக்கள் தமது காணிகளை பார்வையிட முடியாமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .