2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

18 ஆம் திகதிக்கு பின்னரே வடக்கில் பகிஸ்கரிப்பு

க. அகரன்   / 2018 மே 16 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்தே வட பிராந்திய தனியார் பஸ்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வடபிராந்திய தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர்  கே.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அகில இலங்கை  தனியார் பஸ் உரிமையாளர்களால் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தை சேர்ந்த 5 மாவட்டங்களின் தனியார் பஸ் உரிமையாளர்கள், எதிர்வரும் 18ஆம் திகதி  முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதை கருத்தில் கொண்டு வட பிராந்திய தனியார் பஸ் சங்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு வரை வழமையாக தமது சேவைகளை வழங்குவது என தீர்மானித்துள்ளனர்.

இதன்படி வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் இடையேயான  சேவைகளும், உள்ளுர் சேவைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வழமை போன்று நடைபெறும்.

எதிர்வரும் 18 ம் திகதிக்கு பின்னரும் தென்னிலங்கை தனியார் பஸ்களின் பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் பட்சத்தில் அவர்களோடு இணைந்து வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் போராட்டத்தில் இணையும் என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .