2024 மே 02, வியாழக்கிழமை

உலக சிறுவர் தின தேசிய நிகழ்வுகள் நாளை அனுராதபுரத்தில் ஆரம்பம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சபூர்தீன்)
உலக சிறுவர் தின தேசிய நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை அநுராதபுரத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அநுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் நாளை முதல் தேசிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதோடு இறுதி தினமான 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்வுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்தார்.

இவ்விழாவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்களாக 500 சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை இம்முறை முதன் முறையாக பிரதேச செயாலாளர் பிரிவு மற்றும்  மாவட்ட மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த மாதிரி சிறுவர் கிராமங்களுக்கு ஜனாதிபதியினால் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதோடு உலக சிறுவர் தினத்தையொட்டி முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

மேலும் தேசிய சிறுவர் நிதியத்திற்கு நிதி சேகரிக்கும் முகமாக விசேட கொடி விற்பனையும் செயற்படுத்தப் படவுள்ளது.
இம்முறை நடைபெறும் உலக சிறுவர் தேசிய நிகழ்வை ஒத்ததாக இரண்டாந் திகதி நாட்டிலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சிறுவர் கழகங்களினூடாக சமாதான ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்த மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .